Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறப்பு.. உற்சாகமாக செல்லும் மாணவர்கள்..!

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (07:40 IST)
தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறக்கப்படுவதை அடுத்து மாணவ மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். 
 
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் வெயிலின் கொடுமை அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டது 
 
இந்த நிலையில் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஜூன் 12-ம் தேதி 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் ஜூன் 14ஆம் தேதி 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார். 
 
அந்த வகையில் இன்று 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதை அடுத்து மாணவ மாணவிகள் உற்சாகமாக சீருடை அணிந்து பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் நோட்டு, எழுதுபொருள்கள், பேக்,ஷூ கடைகளில் கூட்டம் அலைமோதியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments