தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று கொரொனா தொற்றால் 718 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,27, 635 ஆக அதிகரித்துள்ளது.
கொரொனாவில் இருந்து 751 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரொனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,81,434 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரொனாவால் 11 பேர் உயிரிழந்தனர். இதுவரை கொரொனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 36, 492 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்று சென்னையில் 117 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுவரை இங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிகை 5,58,148 ஆகும்,
தற்போது கொரோனா தொற்றுப் பாதிப்பிற்காகச் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,200 ஆக அதிகரித்துள்ளது.