Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றை போல் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு: ரூ.100ஐ தொடுமா?

பெட்ரோல்
Webdunia
புதன், 5 மே 2021 (07:05 IST)
ஐந்து மாநிலத் தேர்தல்கள் முடிந்து முடிவுகள் வெளியானதும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்று ஏற்கனவே அரசியல் கட்சி தலைவர்கள் கணித்து இருந்தனர்.
 
அதேபோல் நேற்று முதல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடங்கிவிட்டது. நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த  நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது.
 
இன்று சென்னையில் பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டர் ஒன்றுக்கு 92.70 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல் டீசல் விலை இன்று ஒரே நாளில் 19 காசுகள் உயர்ந்து 86.09 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 
இதே ரீதியில் சென்றால் இன்னும் ஒரு சில நாட்களிலேயே பெட்ரோல் விலை ரூபாய் 100ஐயும், டீசல் விலை ரூபாய் 90ஐயும் தொட்டு விடும் அபாயம் இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலை உயரும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைவர் பதவியிலிருந்து தூக்கிய ராமதாஸ்! அதிர்ச்சியில் அன்புமணி! - கட்சியை விட்டு விலகுகிறாரா?

இன்ஸ்டாகிராம்ல சின்ன பசங்க அதை பண்ண முடியாது! - புதிய கட்டுப்பாடுகள்!

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments