Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றும் 500ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: அதிர்ச்சியில் தமிழக மக்கள்

Webdunia
செவ்வாய், 5 மே 2020 (20:05 IST)
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை நாள்தோறும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் இன்று மட்டும் 508 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
 
இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4058ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 508 பேர்களில் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 279 பேர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2008ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
சென்னையை அடுத்து  கடலூரில் 68 பேர்கள், செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா 38 பேர்கள், விழுப்புரத்தில் 25 பேர்கள், திருவள்ளூரில் 18 பேர்கள், நாமக்கல்லில் 15 பேர்கள், திண்டுக்கல்லில் 7 பேர்கள், திருப்பத்தூரில் 5 பேர்கள், தர்மபுரி, காஞ்சிபுரம், பெரம்பலூர், சேலம், தென்காசி, நெல்லை, திருச்சி மற்றும் விருதுநகரில் தலா ஒருவர் கொரோனாவால் இன்று பாதிப்பு அடைந்துள்ளனர்.
 
மேலும் மிழகத்தில் இன்று கொரோனாவுக்கு இருவர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது என்பதும், தமிழகத்தில் இன்று மட்டும் 11,858 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், மொத்தம் 174,828 பேர்களுக்கு  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 9615 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இதில் சென்னையில் மட்டும் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3200 என்பதும் குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 32 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மதுக்கடையை அகற்ற கூடாது: உண்ணாவிரதம் போராட்டம் செய்யும் மதுப்பிரியர்கள்..!

கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments