Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: இன்று சென்னை உள்பட 19 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (07:46 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் ஒரு சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ததால் இன்றும் 19 மாவட்டங்களுக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது
 
இன்று பள்ளிகளுக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், பெரம்பலூர், நாகை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் திருச்சி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மொத்தம் 19 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

அடுத்த கட்டுரையில்
Show comments