இன்றும் நாளையும், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
கடந்த 26 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
இந்நிலையில் இன்றும் நாளையும், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த மழை தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு தொடரும். சென்னை, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.