Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (13:46 IST)
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று பெரம்பலூர், அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை,  தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு
 
அதேபோல் நாளை தர்மபுரி, நாமக்கல், சேலம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் நாளை மறுநாள் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளிலும், ஜூலை  மற்றும் 10 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும்  ஜூலை 8 முதல் 10ஆம் தேதி வரை அரபிக்கடலில் கர்நாடகா கேரளா லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் அரபிக்கடல், தென்மேற்கு, மத்திய மேற்கு பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

தொழிற்சாலை பாய்லர் வெடித்து தீ விபத்து: 10 பேர் பலி.. 48 பேர் காயம்..!

மனைவியை அபகரித்து சொத்தையும் கேட்ட கட்சி தலைவர்! ஆள் வைத்து கதை முடித்த காங். பிரமுகர்!

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments