Publish Date: Fri, 05 Jan 2024 (07:30 IST)
Updated Date: Fri, 05 Jan 2024 (07:32 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதல் நிலை தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் நடந்த நிலையில் அதன் முடிவுகள் அதே ஆண்டு ஜூன் மாதம் வெளியானது.
அதனை அடுத்து 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதன்மை எழுத்துத்தேர்வு நடைபெற்ற நிலையில் அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. கடந்த பின் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 95 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பணியில் 245 பேர் நியமனம் செய்வதற்கான முதன்மைத் தேர்வு 2023 நவம்பர் 4,5 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் இம்மாதம் வெளியிடப்படும் என தெரிகிறது.