Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டதா? டி.என்.பி.எஸ்.சி விளக்கம்

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (20:37 IST)
டி.என்.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் மொழிப்பாடம் நீக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு பதில் திறனறி புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதாவது முதல்நிலை தேர்வில் மொழிப்பாடம் நீக்கப்பட்டு, அதற்கு  பதிலாக பிரதான தேர்வில் தமிழக அரசியல் வரலாறு, தமிழக பாரம்பரிய பகுதிகள் குறித்த பொது அறிவு சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது
 
டி.என்.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் மொழிப்பாடம் நீக்கப்பட்டதால் தமிழ் தெரியாதவர்கள் எளிதில் இந்த தேர்வில் வெற்றி பெற்று வேலைக்கு சென்றுவிடுவார்கள் என்று இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பியது. மேலும்  தமிழுக்கான முக்கியத்துவம் தேர்வில் குறைக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும் குருப் 2 தேர்வுக்கு இனி மொழிப் பாடம் கிடையாது என்பதால் இனி வடநாட்டுக்காரர்கள் தாசில்தாரர்களாக, டி ஆர் ஓ வாக எளிதில் நம் இடத்தைப் பிடிப்பார்கள் என்றும், நம் மக்கள் இருப்பிடச் சான்றுக்கும் வருமானச்சான்றுக்கும் ரேசன் கார்டுக்கும் அவர்கள் முன் நிற்க வேண்டும் என்றும் சமூக வலைத்தள பயனாளிகள் குற்றஞ்சாட்டினர்.
 
ஆனால், முதல்நிலை தேர்வில் இருந்த தமிழ், பிரதான தேர்வுக்கு கொண்டு வந்திருப்பதாகவும், திருக்குறள் மட்டுமே ஒரு தாள் முழுவதும் எழுதும் வகையில் மிகச்சிறப்பாக  பிரதான தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தமிழ் தெரியாத வேற்று மொழியினர் உள்ளே வருவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தள பயனாளிகள் குற்றஞ்சாட்டியவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளனர்.
 
இந்த நிலையில் தமிழுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படவில்லை என டி.என்.பி.எஸ்.சி தற்போது விளக்கம் அளித்துள்ளது. திருக்குறள் உள்ளிட்ட தமிழ் மொழி சார்ந்த பகுதிகள் பிரதானத் தேர்வுக்கு மாற்றப்பட்டதால் முதல்நிலைத் தேர்வில் மொழிப்பாடம் நீக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி விளக்கியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments