Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெ. மரணம் - தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜெ. மரணம் - தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
, திங்கள், 9 ஜனவரி 2017 (12:28 IST)
ஜெயலலிதா தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
ஜெயலலிதா மரணம் குறித்து பல விதமான வதந்தி பரவி வருகிறது. அவரது மரணம் மர்மமாகவே உள்ளது. அவரது மரணத்தில் பொதுமக்களிடையே சந்தேகம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
 
சசிகலா புஷ்பா ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரணை கோரி அளித்த மனுவை, உள்துறை அமைச்சகம் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழகத்தில் மூன்று பேர் வழக்கு தொடர்ந்தனர். அதில் ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. 
 
அவர் வழக்கு தொடர்ந்த மனுவில் முக்கியமாக குறிப்பிட்டது:-
 
ஜெயலலிதா மரணத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் சந்தேகம் உள்ள நிலையில், உண்மையை தெரிந்துக் கொள்வதற்காக இந்த வழக்கு போடப்பட்டுள்ளது என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதன்படி வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்லாக்காசு ஜெயலலிதா என்னை குறை கூறுவதா? - இப்படி பேசிய வளர்மதி