Pooled Test என்றால் என்ன? தமிழக அரசு இதை பரிந்துரைக்க காரணம் என்ன?

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (12:48 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் புது பரிசோதனை முறையை பரிந்துரைக்கும் தமிழக அரசு. 
 
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4965 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 1,80,643 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்றால் 75 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,626 ஆக அதிகரித்துள்ளது.
 
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் 1,130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செயப்பட்டுள்ளது. இதுவரை 88,377 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,475 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
சென்னையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் வழக்கமான சோதனை முடுக்கிவ்டப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் புதிய முறையில் பரிசோதனை  செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 
 
ஆம், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் (Pooled Test) முறையில் குழு பரிசோதனை செய்ய முடிவு. குவு பரிசோதனை என்பது 10 பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஒரே முறையில் பரிசோதனை செய்வதாகும். குழு பரிசோதனை முடிவில் தொற்று இல்லை எனில் ஒரே நேரத்தில் 10 பேருக்காக ரிசல்ட் கிடைத்துவிடும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments