Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானில் இரு தாலிபன் தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இளம் பெண்

Webdunia
ஆப்கானிஸ்தானில் தனது பெற்றோரை கொன்ற இரண்டு தாலிபன் தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளிய பதின் வயது பெண் ஒருவர் சமூக ஊடகங்களில் பெரிதும்  பாராட்டப்படுகிறார்.

தமது பெற்றோர் கொல்லப்பட்ட பிறகு, தமது குடும்பத்தின் ஏகே 47 துப்பாக்கியை கையில் ஏந்திய இந்தப் பெண், இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றார். இவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் பலர் காயமடைந்ததாக கோர் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
அப்பெண்ணின் தந்தை அரசாங்க ஆதரவாளர் என்பதால், தீவிரவாதிகள் அவர்கள் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. துப்பாக்கி ஏந்தியபடி இருக்கும் அந்தப்  பெண்ணின் புகைப்படம் மிகவும் வைரலானது.
 
இந்த சம்பவத்துக்குப் பிறகு க்ரிவா கிராமத்தில் இருக்கும் அவரது வீட்டைத் தாக்க மேலும் அதிக தீவிரவாதிகள் வந்துள்ளனர். ஆனால், அக்கிராம மக்களும் அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களும் அவர்களை அடித்து விரட்டியதாகத் தெரிகிறது.
 
தாலிபன்களை சுட்ட அந்தப் பெண்ணுக்கு 14ல் இருந்து 16 வயதுக்குள் இருக்கும் என்று கூறிய அதிகாரிகள், அவரும், அவரது தம்பியும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

தமிழகத்தில் ராஜராஜன், ராஜேந்திரனுக்கு சிலைகள்: பிரதமர் மோடி அறிவிப்பு!

’மெர்சல்’ நாயகனுடன் ஜல்லிக்கட்டு நாயகர்? தவெக - ஓபிஎஸ் கூட்டணி? - பண்ருட்டி ராமச்சந்திரன் ஓபன் டாக்!

’வணக்கம் சோழ மண்டலம்’.. சிவனை வழிபடுபவன் சிவனில் கரைகிறான்! - பிரதமர் மோடி பேச்சு!

ஓலைச்சுவடி படிக்கும் தஞ்சை மணிமாறன்! - மன் கீ பாத்தில் புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments