தமிழக அரசு சொன்னதை செய்யவில்லை: 'தங்கமகன்' மாரியப்பன் குற்றச்சாட்டு

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2017 (05:40 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழன் மாரியப்பனுக்கு நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அர்ஜூனா விருது வழங்கி கெளரவித்தார். இதனால் தமிழகமே பெருமை கொண்ட நிலையில் தமிழக அரசு தனக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.



 
 
நான் பதக்கம் பெற்றவுடன் தமிழக அரசு வேலை தருவதாக அறிவித்திருந்தது. ஆனால், இன்று வரை எனக்கு வேலை தரவில்லை. பி.வி.சிந்துவுக்கு ஆந்திர அரசு துணை ஆட்சியர் பதவி வழங்கியுள்ளது போல எனக்கும் தமிழக அரசு நல்ல பதவியை அளிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்' என்று தெரிவித்தார். 
 
மேலும் எனக்கு மத்திய அரசு கேல் ரத்னா விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், மத்திய அரசு அர்ஜூனா விருதுதான் அளித்துள்ளது. இருப்பினும் இனிவரும் காலங்களில் உத்வேகத்துடன் செயல்பட்டு கேல் ரத்னா விருது வாங்க முயற்சிப்பேன்' என்று கூறினார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments