Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் வகுப்பு அவசியம் இல்ல! பள்ளிக்கல்வி ஆணையம்! – மாணவர்கள் ஹேப்பி!

Webdunia
ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (12:13 IST)
தமிழக பள்ளிகள் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தி வரும் நிலையில் மாணவர்களை ஆன்லைன் வழியாக படிக்க கட்டாயப்படுத்த கூடாது என உத்தரவு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் பலருக்கு ஆன்லைன் வழியாக படிக்க மொபைல், இணைய சேவை வசதிகள் இல்லாததாக புகார் எழுந்துள்ளது. இதனால் பல மாணவர்கள் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் வராத மாணவர்களுக்கு வருகை பதிவில் ஆப்செண்ட் போடப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார். அதன்படி மாணவர்களை ஆன்லைன் வகுப்புகளை கட்டாயம் படிக்க வேண்டும் என பள்ளிகள் நிர்பந்திக்க கூடாது. மேலும் ஆன்லைனில் வந்து படிப்பதை வைத்து மதிப்பெண் வழங்குதல் மற்றும் வருகை பதிவு செய்தல் போன்றவையும் கூடாது என கூறப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக கண்காணிக்க ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவிகளுக்கு தொடரும் பாலியல் தொல்லை! - நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் கைது!

இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வு.. ஒரு கிராம் ரூ.8000ஐ நெருங்கியது..!

வேகமாக பரவி வரும் ஜிபிஎஸ் நோய்.. 2 கிராமங்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

எலான் மஸ்கிற்கு கூடுதல் அதிகாரம்: டிரம்பை கண்டித்து அமெரிக்காவில் திடீர் போராட்டம்..!

பனியில் சறுக்கி தலைக்குப்புற கவிழ்ந்த விமானம்! பயணிகள் நிலை என்ன? - கனடாவில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments