Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலை ஏடிஎம்மில் கொள்ளையடித்த அரியானா கும்பல்? – போலீஸார் தீவிர விசாரணை!

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (15:50 IST)
திருவண்ணாமலையில் ஒரே இரவில் 4 ஏடிஎம்களில் கைவரிசை காட்டிய மர்ம கும்பலை போலீஸார் வலைவிரித்து தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலையில் உள்ள போளூர், பணிமனை, மாரியம்மன் கோவில் தெரு, கலசப்பாக்கம் ஆகிய நான்கு பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் ஒரே நாள் இரவில் மொத்தமாக ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு ஏடிஎம்களிலும் ஒரே கும்பல் கொள்ளையடித்திருப்பதாக சந்தேகப்படும் நிலையில் போலீஸார் தனிப்படைகள் அமைத்து கொள்ளைக்கூட்டத்தை தேட தொடங்கியுள்ளனர். ஏடிஎம் கொள்ளை நடந்த பகுதிகள் மற்றும் மாவட்ட எல்லையில் உள்ள சிசிடிவி கேமராக்களின் வீடியோக்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொள்ளையர்கள் தமிழகத்திலேயே தங்கியுள்ளார்களா என்பதையும் தனியார் விடுதிகள் உள்ளிட்டவற்றில் சோதனையிட போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு

இதுதவிர அரியானா மாநிலத்தை சேர்ந்த ஏடிஎம் கொள்ளை கும்பல் இந்த சம்பவத்தை செய்திருக்கலாம் என கருதப்படுவதால் அரியானா கும்பலை போலீஸார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை: 3 தனிப்படைகள் அமைப்பு

வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு நாள்.. த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை

டங்ஸ்டன் விவகாரம்.. வெட்ட வெளிச்சமானது திமுக அரசின் பொய்: எடப்பாடி பழனிசாமி

110 பேருடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது! அதிர்ச்சி சம்பவம்..!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: முதல்வர் பதிலளிக்க அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments