ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்ற நிலையில் நாளை சனிக்கிழமை பௌர்ணமி வருவதை அடுத்து கிரிவலம் செல்வதற்கு ஏதுவான நேரம் எது என்பது குறித்த தகவலை தற்போது பார்ப்போம்
நாளை சனிக்கிழமை இரவு 10.41 மணிக்கு தொடங்கி ஞாயிறு நள்ளிரவு 12.48 மணி வரை பௌர்ணமி இருக்கிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்
திருவண்ணாமலை மலையை சிவனாக வழிபட்டுவதால் அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் இந்த மலையை பௌர்ணமி நாளில் கிரிவலம் சென்று வந்தால் ஏராளமான பலன் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.