Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய போலி மருத்துவர் திருதணிகாசலம் – ஜாமீன் மீண்டும் மறுப்பு!

Webdunia
சனி, 30 மே 2020 (10:49 IST)
சென்னையை சேர்ந்த திருதணிகாசலம் என்பவர் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி வதந்தியைப் பரப்பிய நிலையில் கைது செய்யப்பட்டார்.

சீனாவில் இருந்து பரவிய கொரொனா வைரஸ் பல்வேறு உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் மூன்றாது கட்டமாக ஊரடங்கு உத்தரவு இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் அன்றாடமும் கொரொனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. முக்கியமாக கோயம்பேடு சந்தை மூலமாக பலருக்கும் கொரொனா பரவி வருகிறது. 

இந்நிலையில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக திருதணிகாசலம் என்பவர் சமூகவலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். ஆனால் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் போலி மருத்துவர் என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது அரசு தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்புகார் குறித்து போலீஸார் முதற்கட்ட விசாரணை நடவடிக்கை எடுத்தனர். இதன் விளைவாக தற்போது அந்த சித்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் கடந்த வாரம் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீனுக்கு விண்ணப்பித்த அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியிருந்தார். ஆனால் இம்முறையும் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments