Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புழல் சிறையில் 31 பேருக்கு கொரோனா – அதிர்ச்சி அளிக்கும் தகவல்!

Webdunia
சனி, 30 மே 2020 (10:41 IST)
சென்னை புழல் சிறையில் 93 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் 31 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

சென்னை புழல் மத்திய சிறையின் தண்டனை பிரிவில் 800 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். சிறைக்கைதிகளில் சிலர் பயிற்சியை முடித்து கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை ஆகிய சிறைகளுக்கு மாற்றப்பட்ட நிலையில் அந்த சிறைகளில் 5 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் புழல் சிறையில் இருந்து கொரோனா பரவியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் புழல் சிறையில் இருந்து சென்று கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களிடம் பழகிய 74 கைதிகள், 19 காவலர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த சோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன, அதில் 31 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து 31 பேரும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், தேவையான மருத்துவ வசதிகள் அளித்து வருவதாகவும் புழல் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியானது கைதிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி: பெரும்பான்மை இல்லை என அறிவிப்பு..!

ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்தார்: பா.ஜ.க. பெண் எம்.பி. புகாரால் பரபரப்பு.!

பாஜக எம்பிக்கள் தள்ளியதால் எனக்கு காயம்: மல்லிகார்ஜுன கார்கே புகார்

காங்கிரஸ் கட்சியின் வன்முறை நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது: கங்கனா ரனாவத்

அடுத்த கட்டுரையில்
Show comments