Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!

Siva
புதன், 30 அக்டோபர் 2024 (07:25 IST)
இன்று காலை பத்து மணி வரை தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தென்னிந்திய பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில், இன்று தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில், அதாவது செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே, மேற்கண்ட ஆறு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளவும், தீபாவளி பொருட்கள் வாங்கும் மக்கள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.
 
ஏற்கனவே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும் குறிப்பாக நவம்பர் 1, 2 ஆகிய தினங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுக்கோட்டை ஜூவல்லரி கடையில் 1643.36 கிராம் போலி தங்க நகைகள்.. சோதனையில் அதிர்ச்சி..!

காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!

சென்னையில் ரூ.27 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல்: அதிர்ச்சி தகவல்..!

அரசியல் பயணம் இனி கடுமையாக இருக்கும்: தவெக விஜய் அறிக்கை..!

இன்றிரவு 17 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. தீபாவளி பர்ச்சேஸ் செல்பவர்கள் ஜாக்கிரதை..!

அடுத்த கட்டுரையில்
Show comments