Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 12ஆக உயர்வு

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2020 (07:53 IST)
corona virus
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டஅவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 9ஆக இருந்த நிலையில் நேற்று இரவு திடீரென மேலும் மூன்று பேர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதால்  தமிழகத்தில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது
 
நேற்று ஒரே நாளில் சென்னையைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவருக்கும், திருப்பூரைச் சேர்ந்த 48 வயது நபர் ஒருவருக்கும், மதுரையைச் சேர்ந்த 54 வயது நபர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை திருப்பூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் மூவரும் தனிப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
 
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த 58 வயது நபருக்கு வைரஸ் தொற்று பரவியுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஏனெனில் இவர் எந்த வெளிநாட்டுக்கும் வெளி மாநிலங்களுக்கும் செல்லாதவர் என்றும் வெளிமாநிலத்தில் உள்ளவர்களுடனும், வெளிநாட்டில் உள்ளவர்களுடனும் எந்தவித தொடர்பும் இல்லாத ஒருவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு எப்படி கொரோனா பரவியது என்று மர்மமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏஐ துறை ஆலோசகராக சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்: டிரம்ப் நியமனம்..

ஊழியர்களுக்கு கார், ராயல் என்பீல்ட் வாங்கி கொடுத்த தொழிலதிபர்! - சென்னையில் ஆச்சர்யம்!

எலான் மஸ்க் என் நண்பர்தான்.. அதுக்காக அவர் அதிபராக முடியாது! - ட்ரம்ப் கொடுத்த அதிர்ச்சி பதில்!

விவாகரத்து பெற்ற பணக்காரர்களுக்கு குறி.. 3 பேரை திருமணம் செய்து ரூ.1.21 கோடி மோசடி செய்த இளம்பெண்..!

அம்பேத்கர் பெயரை 1000 தடவை சொல்லணும்..! அமித்ஷாவுக்கு எதிராக திருமா எடுக்கும் நூதன போராட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments