Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்! அப்போ டிடிவி நிலைமை? – திமுகவுக்கு ரூட் போடும் திவாகரன்

Webdunia
வியாழன், 30 ஜனவரி 2020 (13:22 IST)
தமிழகத்திற்கு மு.க.ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை டிடிவி தினகரன் தொடங்கினார். டிடிவி தினகரனுக்கும் சசிகலாவின் மற்றொரு சகோதரர் திவாகரனுக்கு ஏற்பட்ட மோதலால் திவாகரன் தனிக்கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால் தினகரனை போல கட்சியை திவாகரனால் வளர்த்தெடுக்க முடியவில்லை. இந்நிலையில் திவாகரன் திமுகவில் இணைய போவதாக அரசல் புரசலாக பேச்சு அடிப்பட்டு வந்தது.

திமுக பிரமுகர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் வீட்டு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட திவாகரன் திமுகவுக்கு ஆதரவாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ”தமிழ் மற்றும் தமிழகம்தான் நமக்கு முக்கியம். அதை காப்பவர்கள் பின்னால் நாம் நிற்க வேண்டும். தமிழகத்தில் திராவிட பாரம்பரியத்தை காக்க வேண்டும். அதை காக்கும் ஒரே சக்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான்” என பேசியுள்ளார்.

மன்னார்குடி வட்டாரத்தில் திவாகரனுக்கு செல்வாக்கு உள்ள நிலையில் வலுவிலந்து வரும் அமமுகவுக்குள் அவரை நுழைத்துவிட உள்ளூர் பிரமுகர்கள் பேசி வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் திவாகரன் திமுகவுக்கு ஆதரவாக பேசியிருப்பதன் மூலம் சட்டமன்ற தேர்தலில் திவாகரன் திமுக பக்கம் கூட்டணி அமைக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும் அந்த மேடையிலேயே டிடிவியை மறைமுகமாக சாடியுள்ள திவாகரன் “நான் எதையும் எதிர்பார்த்து அரசியலுக்கு வரவில்லை. சிலருக்கு இடைஞ்சல் செய்வதற்காகவே அரசியலுக்கு வந்தேன்” என பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments