’என்னப்பா இது மெஷின் ஒரே கோளாறு ’ - பொதுமக்கள் புலம்பல்

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (09:53 IST)
நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இன்றைய நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மக்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று காலைமுதல் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழகமெங்கும் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரம் கோளாறு ஏற்பட்டது.
 
நாமக்கல் கோட்டை நகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் எந்திரங்கள் தயாரகாததால் வாக்குப்பதிவு தாமதம் ஆனது. 
 
நெல்லை கோடீஸ்வரன் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னனு வாக்குப்பதிவு எந்திரம் பழுது ஆனது.
 
சென்னை அண்ணாநகர் மேற்கில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு எந்திரம் வேலைசெய்யவில்லை.
 
தூத்துக்குடி கிராமத்தில் எந்திர கோளாறு 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
 
காலை 7 முதல் 9 மணி வரை 13.48 % வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரகாச சாஹூ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments