Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெற்கில் ஏற்பட்டுள்ள இந்த விடியல் நாட்டில் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும்- முதல்வர் முக.ஸ்டாலின்

Webdunia
சனி, 20 மே 2023 (17:32 IST)
24 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல்  கடந்த 10 ஆம்  தேதி நடைபெற்றது.இதன் வாக்கு எண்ணிக்கை 13 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் வெளியானது.

பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே போட்டி இருந்த நிலையில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதை அக்கட்சியினர்  நாடு முழுவதும் கொண்டாடினர்.

இதையடுத்து, முன்னாள் முதல்வர் சித்தராமையா, டிகே. சிவக்குமார் இடையே யார் முதல்வர் பதவியில் அமர்வது என்ற போட்டி இருந்த நிலையில், கட்சி மேலிடம் தலையிட்டு,  முதல்வராக சித்தராமையாவையும், துணைமுதல்வராக சிவக்குமாரை அறிவித்தது.

அதன்படி, இன்று கர்நாடகாவில் உள்ள பெங்களூரில்  முதலமைச்சராக சித்தராமையா மற்றும் துணைமுதல்வராக டிகே. சிவக்குமார் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த  நிகழ்ச்சியில் அம்மாநில  கவர்னர் தாவர்சந்த் கெலாட் முறைப்படி அவர்களுக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் புதிய அமைச்சரவையில் 8 அமைச்சர்கள் பதவியேற்றனர். இவர்களுக்கும் கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம்  செய்து வைத்தார்.

இந்த நிலையில், கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள முதல்வர் சித்தராமையா மற்றும் துணைமுதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,’’ கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள முதல்வர் சித்தராமையா மற்றும் துணைமுதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இருவரும் தங்கள் திறமையான நிர்வாகம் மூலம் கார்நாடக மாநிலத்தை புதிய  உயரத்திற்கு கொண்டு செல்வார்கள் என்று நம்புகிறேன். தெற்கில் ஏற்பட்டுள்ள இந்த விடியல் நாட்டில் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும். மாற்றத்தை முன்னறிவிக்கும் மணியோசை தான் இந்த பெங்களூர் நடைபெற்ற பதவியேற்பு விழா’’ என்று கூறியுள்ளார்.

இவ்விழாவிற்கு முதல்வர் முக.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் நேரில் சென்ற முதல்வர் முக.ஸ்டாலின், முதல்வர் சித்தராமையா மற்றும் துணைமுதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகிய இருவரையும் வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

குவைத் நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவம்..!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments