Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருவள்ளூர் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி!

Sillambam
, புதன், 11 அக்டோபர் 2023 (12:01 IST)
தமிழ்நாடு சிலம்பப் பேரவையின் சார்பாக காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி சென்னை  ஐயப்பன்தாங்கலில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.


 
இந்த போட்டியில் சுமார்  320 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

இதில் பத்து வகையான பிரிவு அடிப்படையில் நடைபெற்ற இப் போட்டியானது ஒற்றைக்கம்பு,  இரட்டைக் வால் வீச்சு,சுருள், அடிமுறை, மான்கொம்பு, வேல்கம்பு போன்ற  போட்டிகள் நடைபெற்றன.

இப் போட்டியில்  சிறப்பு விருந்தினராக விளையாட்டு மேம்பாட்டு அணி காஞ்சிபுரம் வடக்கு திமுக மாவட்ட அமைப்பாளர்  T.R. சாரதி பெரியநாயகம் மற்றும் ஐயப்பன் தாங்கல் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் SVS முருகதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது

இப் போட்டிக்கு தமிழ்நாடு சிலம்பப் பேரவையின் தலைவர் ஜே.ஈசன்   பொதுச் செயலாளர் D. சண்முகப்பிரியா, பொருளாளர் ஜே.  சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இந்த விழாவுக்கு திருவள்ளூர் மாவட்ட சிலம்பப் பேரவையின் செயலாளர் கே. ஐயப்பன்,தலைவர் சி. நந்தகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்டோபர் 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு