தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மேயர் தேர்தலில் உதயநிதி போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் விருப்பமனு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திடீரென நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் ’சென்னை மாநகராட்சியை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்
இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் திமுகவின் சார்ப்பில் உதயநிதி ஸ்டாலின் சென்னை மேயர் வேட்பாளராக போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. உதயநிதி ஸ்டாலின் சென்னை மேயர் வேட்பாளராக போட்டியிடக் கூடாது என்பதற்காக மறைமுகமாக திருமாவளவன் இவ்வாறு காய் நகர்த்துகிறாரா? என்ற சந்தேகத்தை அரசியல் விமர்சகர்கள் எழுப்பியுள்ளனர். இதனால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது
ஏற்கனவே சென்னை மாநகராட்சியை தனித்தொகுதி அல்லது பெண்களுக்கான தொகுதியாக மாற்ற வேண்டும் என தமிழக அரசு திட்டமிட்டு வரும் நிலையில், திருமாவளவனின் இந்த கோரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது