Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் அம்பேத்கர் திருமாவளவன்: சொன்னது யார் தெரியுமா?

Webdunia
புதன், 23 ஜனவரி 2019 (20:52 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் என்று கூறினாலே தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் அவர் ஒரு ஜாதிக்கட்சியின் தலைவர் என்பது தெரியும். ஆனால்  திருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல என்றும், அவர் தமிழகத்தின் அம்பேத்கர் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசம் பாதுகாப்போம் என்ற மாநாடு திருச்சியில் நடந்து வருகிறது. இதில்  சீதாராம் யெச்சூரி, மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், வைகோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் வைகோ பேசியபோது, 'நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் என்றும் பிரதமர் மோடியும், அவது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்றும் கூறினார்.

மேலும் மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும் என்றும், வாஜ்பாய்க்கு மாற்று உருவானதுபோல் மோடிக்கு மாற்று நிச்சயம் உருவாவார்கள் என்றும் சீதாராம் யெச்சூரி பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்.. விஷம் வைக்கப்பட்டதா?

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல்.. தமிழக அரசு தலையிட வேண்டும்: அன்புமணி..!

'வக்ஃப் வாரிய கூட்டுக்குழுவில் நடந்தது என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ஆ ராசா விளக்கம்..!

வக்ஃப் மசோதா கூட்டுக் குழுவில் இருந்து ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்..!

சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் சரணடைந்த கொலை குற்றவாளி.. விநோத சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments