Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்திமுனையில் 50 பெண்களை சூறையாடிய திருடன் - சென்னையில் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2017 (09:36 IST)
திருடச்சென்ற இடத்தில் கத்திமுனையில் பெண்களை மிரட்டி கற்பழித்து வந்த திருடன் கைது செய்யப்பட்டான்.


 

 
சென்னை சைதாப்பேட்டையில் நேற்று முன் தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அறிவழகன் என்ற நபர் சிக்கினார். இவர் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் இருப்பதால் அவரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 
 
இவர் பெயர் அறிவழகன்(27). கிருஷ்ணகிரியை சேர்ந்த இவர், பட்டப்படிப்பை முடித்துவிட்டு, பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் செய்த வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு வந்து திருட்டு தொழிலை செய்து வந்துள்ளார். 
 
ஒருமுறை திருட சென்ற வீட்டில் இருந்த பெண் கூச்சல் போட்டுள்ளார். அப்போது கத்தி முனையில் அவரை மிரட்டிய அறிவழகன், அவரது வாயை பொத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட கிளர்ச்சியில் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின் அது பிடித்துபோக, திருடச்செல்லும் பல வீட்டில் பெண்களை மிரட்டி கற்பழித்து வந்துள்ளார். 

இதுவரை தனது காமப்பசிக்கு 50க்கும் மேற்பட்ட பெண்களை இரையாக்கியுள்ளார். மேலும், வெளியே கூறினால் குடும்பத்தையே கொலை செய்து விடுவேன் என மிரட்டியதால், அப்பெண்கள் யாரும் அதை வெளியே கூறவில்லை எனத்தெரிகிறது.
 
இதுகேட்டு அதிர்ச்சியைடைந்த போலீசார், இவரால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் ரகசிய விசாரணை செய்ய முடிவெடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்