Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருட போன வீட்டில் சுண்டியிழுத்த மீன் குழம்பு! – செம தூக்கம் போட்ட திருடன்!

Webdunia
திங்கள், 15 ஜூன் 2020 (12:40 IST)
கன்னியாக்குமரியில் வீடு ஒன்றில் திருட சென்ற ஆசாமி அங்கிருந்த மீன் குழம்பை சாப்பிட்டுவிட்டு தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாக்குமரி அருகே உள்ள கேரள பகுதியை சேர்ந்தவர் சதீஷ். கன்னியாகுமரி பரைக்கோடு பகுதியில் ஆங்காங்கே திருடி வந்த இவரை போலீஸார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திருட சென்றுள்ளார் சதீஷ். அந்த வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லாததால் அங்கிருந்து மீன் குழம்பு சாப்பாட்டை நன்றாக சாப்பிட்டுவிட்டு அயற்சியில் மொட்டை மாடியில் சென்று படுத்து தூங்கியிருக்கிறார்.

காலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மொட்டை மாடியில் தூங்குவதை கண்டு அதிர்ந்த அப்பகுதி மக்கள் சதீஷை மடக்கி பிடித்து போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். திருட சென்ற நபர் மீன் குழம்பை தின்று விட்டு தூங்கி மாட்டிக் கொண்ட சம்பவம் கன்னியாக்குமரி பகுதியில் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments