Webdunia - Bharat's app for daily news and videos

Install App

35,000 கோடி கடனில் இயங்கி வரும் தமிழக போக்குவரத்துத் துறை

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2017 (12:04 IST)
தமிழக போக்குவரத்துத் துறை பல்வேறு காரணங்களால் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனை மீட்க அதிகாரிகள் குழு சில பரிந்துரைகளை அளித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு நவம்பர் 17-ந் தேதியன்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பேருந்து கட்டணத்தை உயர்த்த உத்தரவிட்டார். அன்றைய டீசல் விலையைக் காட்டிலும் தற்பொழுது லிட்டருக்கு ரூ. 20 உயர்ந்துள்ளது. மேலும் பராமரிப்பு செலவு 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆனால் தற்பொழுது வரை பேருந்து கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளது. இதனால் போக்குவரத்துக் கழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. எனவே இதனைக் குறைக்க தமிழகத்தில் இயங்கி வரும் 8 போக்குவரத்து கழகங்களை ஒருங்கிணைத்து 4 போக்குவரத்துக் கழகங்களாக மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இதனையடுத்து சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 42 பைசாவிலிருந்து 60 பைசா வரை உயர்த்தவும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 56 பைசாவிலிருந்து 73 பைசா வரை உயர்த்தவும் சூப்பர் டீலக்ஸ் பேருந்துகளில் 60 பைசாவில் இருந்து 75 பைசா வரை உயர்த்தவும் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளின் கட்டணம் கிலோ மீட்டருக்கு 70 பைசாவில் இருந்து 95 பைசாவாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் தற்போது குறைந்தபட்சமாக மூன்று ரூபாயாக உள்ள கட்டணத்தை 5 ரூபாயாக உயர்த்த முடிவு செய்துள்ளனர். வெள்ளை போர்டு, பச்சைப் போர்டு மற்றும் டீலக்ஸ் வகை பேருந்துகளின் கட்டணம் அந்தந்த தூரத்துக்கு ஏற்றவாறு உயரும். இந்த முடிவு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்..!

டெல்லியில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ரூ.25 லட்சம்.. காங்கிரஸ் வாக்குறுதி..!

கேஸே நாங்கதான்.. திருட்டு வழக்கில் பீஸ் கொடுக்க வக்கீலிடமே திருடிய திருடன்!

சென்னையில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை: பெரும் பரபரப்பு

ஞானசேகரன் திமுக அனுதாபிதான்.. ஆனால்..? - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments