Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்களை நோக்கி துப்பாக்கியை நீட்டத் தொடங்கிய இலங்கை கடற்படை! - அதிகரிக்கும் அட்டூழியம்!

Prasanth Karthick
வியாழன், 26 செப்டம்பர் 2024 (10:24 IST)

சமீப காலமாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வந்த நிலையில் தற்போது துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தமிழக மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்படும் சம்பவங்களும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவங்களும் தொடர்கதையாக இருந்து வருகின்றன. சமீபத்தில் வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பல தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் தற்போது கைது சம்பவங்களை தாண்டி மீனவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டவும் துணிந்துள்ளது இலங்கை கடற்படை. ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 300க்கும் மேற்பட்ட படகுகளில் கச்சத்தீவு அருகே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.
 

ALSO READ: மனைவியின் ஓவர் கட்டுப்பாடு… மாமியாரின் நஷ்டக் கணக்கு – ஜெயம் ரவி விவாகரத்து முடிவெடுக்க இவைதான் காரணமா?
 

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் படகுகளில் ஏறி அவர்களை தாக்கி, மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் துப்பாக்கியை காட்டி மிரட்டி, வானத்தை நோக்கி சுட்டு மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர். இதனால் ஒரு படகிற்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

 

தொடர்ந்து இலங்கை கடற்படை மற்றும் கடற்கொள்ளையர்களால் தங்கள் வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து.. விஜய்யின் திட்டம்..!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பில்.. அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரம்..!

புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்.. எந்தெந்த நகரங்களுக்கு? எப்போது?

சென்னையில் நவம்பர் 12 வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments