அதிமுகவின் ’ஒரே தலைவர் சசிகலா தான்’ ! அதிமுக எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (20:21 IST)
சமீப காலமாக அதிமுக கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என குரல் வலுத்து வருகிறது. அதிமுகவில் ஒன்றைத்தலைமை வேண்டும் என முதலில் குரல் கொடுத்தவர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தான். இவருக்கு ஆதரவாக   ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கே.பி முனிசாமியும் குரல்கொடுத்தார்.
இந்நிலையில் அதிமுக கட்சியி இன்று காலை முதலே பரபரப்பான  நிகழ்வுகள் நடைபெற்றன. குறிப்பாக அதிமுக ஒற்றைத் தலைமைக்காக குழு நடவடிக்கையும் எடுப்பதாக தகவல் வெளியானது.
 
இந்நிலையில் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட தினகரன் ஆதராளரான சசிகலாதான் அதிமுகவின் ஒற்றைத்தலைவராக இருக்க முடியும் என கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எல்.ஏ. பிரபு ஒரு தனியார் ஊடகத்துக்குன் அளித்த பேட்டியில், அனைத்து தொண்டர்களையும்,  அரவணைத்துச் செல்லவும் , கட்சியை  வழிநடத்தவும் சசிகலாவால் மட்டும்தான் முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த பின்னர் முதல்வர் எடப்பாடியால் எப்படி ஒரு நல்ல தலைவராக இருந்து கட்சியை வழிநடத்த முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments