''சந்தி சிரிக்கும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு!- எடப்பாடி பழனிசாமி

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (21:19 IST)
‘காவல் துறையினரின் கையை கட்டும் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனம்’ என்று முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘’கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு; கத்தியால் வெட்டிக்கொலை; செல்போனுக்காக ஓடும் ரயிலில் பெண்ணை தள்ளிக் கொலை; சாலையில் செல்லும் பெண்களிடம் நகை வழிப்பறி என்று தொடர்ந்து பல நிகழ்வுகள் தமிழகத்தில் பல இடங்களில் நடந்தேறி வருகிறது.

மக்களைக் காப்பாற்ற துப்பு இல்லாமல், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வக்கில்லாமல், காவல் துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சர், இனியாவது காவல் துறையை தனது ஏவல் துறையாக பயன்படுத்தாமல், அம்மாவின் அரசில் எப்படி காவல் துறை சட்டப்படி, சுதந்திரமாக செயல்பட்டதோ, அதுபோல் காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, சட்டப்படி செயல்பட அனுமதிக்க வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அன்னைக்கு சட்டைய கிழிச்சிட்டு நின்னீங்க!.. ரிசல்ட்டுக்கு அப்புறம்!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. நடைப்பயணம், பேரணி நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments