Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இஸ்லாமியர்களுக்கு மு.க.ஸ்டாலின் இஃப்தார் வாழ்த்து

இஸ்லாமியர்களுக்கு மு.க.ஸ்டாலின் இஃப்தார் வாழ்த்து

Advertiesment
இஸ்லாமியர்களுக்கு மு.க.ஸ்டாலின் இஃப்தார் வாழ்த்து
, ஞாயிறு, 19 ஜூன் 2016 (07:21 IST)
இஸ்லாமிய மக்களுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இஃப்தார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
திராவிட இயக்கத்துக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் தொடர்ந்து வரும் நல்லுறவினைப் பலப்படுத்தும் நிகழ்வாகத் தான் இந்த விழாவினை கருதுகிறேன். நபிகள் நாயகத்தின் போதனைகளில் உள்ள முற்போக்கான கருத்துகளை, அதுவும் 1500 ஆண்டுகளுக்கு முன்பே அவர் தெரிவித்துள்ள கருத்துகளைத் தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கருணாநிதியும் பல நிகழ்வுகளில் எடுத்துச் சொல்லி உள்ளனர்.
 
இஸ்லாமியர்களின் 5 அடிப்படைக் கடமைகளில் நோன்பும், ஸக்காத் எனும் உதவியும் அடங்கும். தன்னிடமுள்ள செல்வத்தில் ஒரு பகுதியை இல்லாதவர்களுக்கு மனமுவந்து அளிக்க வேண்டும் என்பதை ஸக்காத் வலியுறுத்துகிறது. அதற்கான விடைதான் நோன்பு. ஏழைகளுக்கு நம்மால் இயன்றதைக் கொடுத்து, அவர்களின் பசியைப் போக்கும் மகத்தான பணிக்கு அடையாளமாக இந்த நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
 
இதனை மனித நேயம் போற்றும் விழாவாக திமுக  பார்க்கிறது. மனித நேயம், ஏழைகளின் பால் கருணை காட்டுவது போன்றவற்றை வாழ்வின் கடமைகளாக கடைப்பிடிக்கும் இஸ்லாமிய பெருமக்களுக்கு இந்த இனிய நேரத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தேர்தலுக்காக மட்டும் உங்களுடன் இருப்பவர்கள் நாங்கள் அல்ல. எல்லாக் காலங்களிலும் சிறுபான்மையினர் நலன் காப்பதில் திமுக உறுதியாக இருக்கும் என்பதை நீங்களும் அறிவீர்கள்.
 
திமுக ஆட்சி நடைபெற்ற காலங்களில் இஸ்லாமியர்களுக்கு 3.5% இடஒதுக்கீடு, நபிகள் நாயகம் பிறந்த நாளுக்கு விடுமுறை, உருது அகாடமி, சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் என அனைத்து வகையிலும் சிறுபான்மையினர் நலன் காக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழவும், நல்லிணக்கம் காக்கவும் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் துணை நிற்கும் என தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

500 டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா