Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுரோட்டில் பற்றி எரிந்த அரசு பேருந்து.. நல்வாய்ப்பாக தப்பிய பயணிகள்! - கோவையில் பரபரப்பு!

Prasanth Karthick
வியாழன், 24 அக்டோபர் 2024 (11:18 IST)

பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு சென்ற அரசு பேருந்து திடீரென தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு காலையில் 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பேருந்து ஒன்று பயணித்துக் கொண்டிருந்துள்ளது. பேருந்து ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் வந்துக் கொண்டிருந்தபோது பேருந்தில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.

 

இதனால் உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுனர், பயணிகளை வெளியேறுமாறு எச்சரித்துள்ளார். பயணிகள் அவசர அவசரமாக வெளியேறிய நிலையில், சில நிமிடங்களில் பேருந்து தீப்பிடித்தது. பேருந்து மளமளவென தீப்பிடித்து எரிந்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர்.
 

ALSO READ: 10 நாட்களாக தொடர் ஏற்றத்தில் இருந்த தங்கம் விலை.. இன்று சற்று குறைந்ததால் நிம்மதி..!
 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் மீது மாடல் அழகி பாலியல் குற்றச்சாட்டு.. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சிக்கல்..!

சிதம்பரம் கோவில் நிலங்களை விற்ற தீட்சிதர்கள்? - ஆதாரங்களுடன் இந்து சமய அறநிலையத்துறை!

இந்திய சுற்றுலா பயணிகள் இல்லாததால் பொருளாதார வீழ்ச்சி.. சம்பளத்தை குறைக்கும் மாலத்தீவு..!

தலைகீழாக சரியும் பங்குச்சந்தை.. இந்த வாரம் முழுவதுமே நஷ்டம் தான்..!

நேற்று ஒருநாள் மட்டுமே சரிவு.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments