Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த.வெ.க விஜயின் முதல் மாநாடு..! பிரமாண்ட ஏற்பாடு.! எங்கு - எப்போது தெரியுமா..?

Senthil Velan
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (10:09 IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வருகிற ஏப்ரல் மாதத்தில்  மதுரையில் நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ள நிலையில், மாநாட்டை மிக பிரம்மாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ல் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அப்போதே அவர் 2026 சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு எனத் தெரிவித்தார்.  இந்த மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனவும் யாருக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம் எனவும் கூறினார்.
 
இடைப்பட்ட இந்த 2 வருடங்களில் கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.  சமீபத்தில் சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. 

அதில் பல்வேறு ஆலோசனைகளும் முடிவுகளும் எடுக்கப்பட்டன.  குறிப்பாக 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் எனவும் மகளிர் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
 
இதனிடையே தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாகப் பிரித்து பொறுப்புகள் வழங்க தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்வாறு விஜயின் அடுத்தடுத்த அரசியல் செயல்பாடுகள், அனைவரையும் உற்று நோக்கம் வகையில் அமைந்துள்ளது.

ALSO READ: ஐபிஎல் தொடரில் ஆரம்பமே அமர்க்களம்..! முதல் போட்டியில் சென்னை - பெங்களூர் மோதல்..!
 
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை  வரும் ஏப்ரல் மாதம் மதுரையில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், கட்சி ரீதியாக 100 மாவட்டங்களை உருவாக்கி நிர்வாகிகளை நியமித்த பிறகு மாநாட்டை நடத்த நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments