Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படியும் இருப்பாங்களா? சொத்தை எழுதிக் கேட்டு தாயை அடித்துக் கொன்ற கொடூர மகன்!

Prasanth Karthick
திங்கள், 4 மார்ச் 2024 (09:13 IST)
சொத்துக்களை தனது பெயருக்கு தாய் மாற்றி எழுதி தராததால் இரக்கமின்றி மகனே அடித்துக் கொன்ற சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கர்நாடகாவின் தார்வார் நகர் பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி சாரதா பஜந்தி. இவருக்கு ராஜேந்திரா என்ற 40 வயது மகன் உள்ளார். சாரதா பெயரில் சில சொத்துக்கள் உள்ள நிலையில், அவர் கணவரை இழந்தவர் என்பதால் விதவைகள் உதவித் தொகையும் அவருக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது.

ராஜேந்திரா இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததோடு தாயாரின் உதவித்தொகையையும் பிடுங்கி வைத்துக் கொண்டு செலவு செய்து வந்துள்ளார். மேலும் சாரதாவின் சொத்துக்களையும் தன் பெயரில் எழுதி வைக்குமாறு தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். இதனால் அடிக்கடி இருவருக்கும் வாக்குவாதம் எழுந்து வந்துள்ளது.

ALSO READ: இந்த கூட்டணி வேண்டவே வேண்டாம்.. திருநாவுக்கரசர், ஜோதிமணி கொடுத்த ரிப்போர்ட்..!

சமீபத்தில் அவ்வாறாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராஜேந்திரா அங்கிருந்த இரும்புக்கம்பியை எடுத்து சாரதாவை இரக்கமின்றி சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சாரதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அதன்பின்னர் போலீஸ் கைதுக்கு பயந்த ராஜேந்திரா வீட்டுக்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலையும் செய்துக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் உடனடியாக சம்பவ இடம் விரைந்து இருவர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments