Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண் தொழிலாளி தலை துண்டிக்கப்பட்ட விவகாரம்.! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

edapadi

Senthil Velan

, புதன், 21 ஆகஸ்ட் 2024 (17:03 IST)
இந்த விடியா திமுக ஆட்சியில், பட்டாசு ஆலை முதல் பால் பண்ணை வரை எங்குமே தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
 
தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்து வந்த உமாராணி என்ற பெண் ஊழியர் கன்வேயர் பெல்டில் துணி, தலைமுடி சிக்கியதால் பரிதாபமாக உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன் என்று கூறியுள்ளார். உயிரிழந்த திருமதி. உமாராணி அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பால் பண்ணையில் பணி செய்யும் ஊழியர்கள் ஆபத்தான இயந்திரங்களுக்கு இடையில் பணிபுரியும் போது, அவர்களுக்கான பாதுகாப்பை ஆவின் நிர்வாகம் உறுதி செய்திருக்க வேண்டும் என்றும் ஆனால் இந்த விடியா திமுக ஆட்சியில், பட்டாசு ஆலை முதல் பால் பண்ணை வரை எங்குமே தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
 
பாலில் ஒரு முடி கூட உதிரக் கூடாது என்பதே ஆவின் நிறுவனத்தின் பாதுகாப்பு நெறிமுறை என குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் முறையான பாதுகாப்பு வசதிகளை இந்த விடியா திமுக அரசு ஏற்படுத்தித் தராததன் விளைவாகவே இன்றைக்கு ஒரு பெண் தொழிலாளி தன் தலைமுடி சிக்கி, தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார் என்று புகார் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு விவகாரத்தில் மெத்தனப் போக்குடன் செயல்படும் விடியா திமுக அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்  தெரிவித்துள்ளார்.

 
உயிரிழந்த உமாராணி அவர்களின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை வழங்குவதுடன், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் ஆவின் பால் பண்ணைகளில் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுவதை உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2ஆம் கட்ட சுற்றுப்பயணமும் தோல்வி.. சசிகலாவுக்கு கிடைத்த ஒரே ஆறுதல் இதுதான்..!