Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணம் பிடிக்காமல் ஓடிய மணப்பெண்.... வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்

Advertiesment
திருமணம் பிடிக்காமல் ஓடிய மணப்பெண்.... வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்
, திங்கள், 18 செப்டம்பர் 2023 (11:25 IST)
கடலூர் மாவட்டத்தில்   நேற்று திருமணம் நடக்க இருந்த நிலையில், திருமண மண்டபத்தில் இருந்து மணமகள் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும்(23 வயது), கள்ளக்குறிச்சி மாவட்டம்  உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களது திருமணம்  உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள மண்டபத்தில் நடக்கவிருந்தது.

இதற்காக இருவீட்டார் தரப்பிலும் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப்பட்டது.

எனவே நேற்று முன்தினம் இரவு திருமண மண்டபத்தில் பெண் அழைப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மணமேடைகள் மணமக்கள் பங்கேற்றனர். இதில், உறவினர்கள்ம் நண்பர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில்,  நேற்று அதிகாலையில், திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அதிகாலை 3 மணிக்கு மணப்பெண் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

திருமணம் பிடிக்காததால் மண்டபத்தில் இருந்து மணப்பெண் ஓடியதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மணமகனுக்கு வேறொரு பெண்ணை குறித்த முகூர்த்தத்தில் மணமகனுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்த்னர்.

அதன்படியே ஒரு பெண்ணிடம் பேசி மண்டபத்திற்கு அழைத்து அவரை அந்த இளைஞருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விநாயகர் சதுர்த்தி தினத்தில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!