Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஜெய்ஸ்ரீராம் சொல்லு..” ஏழை பெண்ணை தாக்கும் ஆசாமிகள்! – தொல்.திருமாவளவன் கண்டனம்!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (09:29 IST)
ராஜஸ்தானில் ‘ஜெய்ஸ்ரீராம்’ சொல்ல சொல்லி ஏழை பெண்ணை இருவர் தாக்கும் வீடியோவை ஷேர் செய்துள்ள திருமாவளவன் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் உள்ள நாகோர் என்னும் பகுதியில் இரண்டு இளைஞர்கள், ஒரு ஏழை பெண்ணை ஜெய்ஸ்ரீராம் மற்றும் ஜெய் அனுமான் என சொல்லுமாறு வற்புறுத்தி பைப் ராடால் மூர்க்கமாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதி டிஎஸ்பி ஓம் பிரகாஷ் கௌதம் அளித்த தகவலின்படி இந்த சம்பவம் ஜூன் 13ம் தேதி நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு பெண்ணை மூர்க்கமாக தாக்கிய ஷ்ரவன் குமார் மற்றும் பிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ: ஆண்டவரா இருந்தாலும் தப்புதான்.. ஆஞ்சநேயருக்கு நோட்டீஸ்! – ரயில்வே அதிரடி!

இந்த வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்து பதிவிட்டுள்ள விசிக கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் “இந்த வீடியோ காட்சி நெஞ்சைப் பதற வைக்கிறது. ஒரு அப்பாவி ஏழைப் பெண்ணை இரண்டு காட்டுமிராண்டிகள் ஜெய்சிறீராம், ஜெய்ஹனுமான் சொல்லும்படி உருட்டுக் கம்பியால் தாக்குகின்றனர். மதவெறி எப்படி மனிதனை ஆக்குகிறது என்பதற்கு ஆர்எஸ்எஸின் உற்பத்திகளான இந்தப் பித்துக்குளிகளே சான்றாகும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

300 கோடி மோசடி செய்த வழக்கு-கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3.20 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்த குற்றப்பிரிவு போலீசார்!

ஈஷாவில் களைக்கட்டிய உலக யோகா தின விழா! நூற்றுக்கணக்கான CRPF வீரர்கள் பங்கேற்பு!

இன்றும் நாளையும் கிரிவலம் நாள்.. தமிழக அரசு செய்த சிறப்பு ஏற்பாடுகள்..!

தமிழ்நாட்டில் 3 நாட்கள் அதி கனமழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சர்வதேச யோகா தினம்: காலையிலேயே யோகா செய்த பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments