தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு நடத்த கோரி மணியரசன், திருமுருகன் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கான தீர்ப்பு நாளை காலை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சைப் பெருவுடையார் திருக்கோவில் மன்னன் ராஜ ராஜ சோழன் கட்டியது. இக்கோயிலுகு 12 ஆண்டுகளுக்கும் பிறகு வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
இதில், குடமுழுக்கு தமிழில் நடத்தப்படவேண்டும் என கோரி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நாளை காலை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளிக்கிறது.
ஏற்கனவே, தமிழக அரசு தமிழ் சமஸ்கிருதம் குடமுழுக்கு நடத்தப்படும் என அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தமிழக அறநிலையத்துறை தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தமிழ் , சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலுக்கும் முக்கியத்துவம் தரப்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.