ஓபிஎஸ் சின்ன பிள்ளைதனமாக பேசுகிறார் - தங்க தமிழ்ச்செல்வன்

Webdunia
சனி, 30 டிசம்பர் 2017 (19:08 IST)
காளை மாடு கூட கன்று போடும், ஆனால் தினகரன் கட்சியை கைப்பற்ற முடியாது என ஓபிஎஸ் கூறியது சின்ன பிள்ளைதனமானது என தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

 
இன்று ஊட்டியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தினகரனை கடுமையாக சாடினார். ஜெயலலிதா இருக்கும்போதே தினகரன் முதல்வராக சதி செய்தார். காளை மாடு கூட கன்று போடும் ஆனால் தினகரன் கட்சியை கைப்பற்ற முடியாது என்று கூறினார்.
 
இதற்கு டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் பதிலளிக்கும் விதத்தில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:-
 
அதிமுக ஆர்.கே.நகரில் சந்தித்த தோல்வியை ஒப்புக்கொள்ளட்டும். காளை மாடு கூட கன்று போடும், ஆனால் திகனரன் கட்சியை கைப்பற்ற முடியாது என ஓபிஎஸ் கூறியிருப்பது சிறு பிள்ளைதனமானது. தினகரன் ஓபிஎஸ்யிடம் தனது சதித்திட்டம் குறித்து கூறினாரா. அப்படியானால் அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் ரவியை திடீரென சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி.. என்ன காரணம்?

சென்னையில் ஆபரண தங்கம் விலை மீண்டும் உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

பொங்கல் பரிசுத்தொகை ரூ.3000.. அதிகாரபூர்வ அறிவிப்பு.. கிடைப்பது எப்போது?

சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த தாய்-மகன் கைது.. 4,200 போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மாற்றமில்லை.. திடீர் முடிவெடுத்த அதிகாரிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments