Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுட்டெரிக்கும் வெயிலில் வாகன ஓட்டிகள் சற்றே இளைப்பாற போக்குவரத்து சிக்னலில் தற்காலிக கூரை.

J.Durai
சனி, 4 மே 2024 (15:45 IST)
கோவையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் 10 நாட்களுக்கும் மேலாக சராசரியாக 103 டிகிரி என்ற அளவில் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும்  இருசக்கர வாகன ஓட்டிகளும் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். 
 
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் கோவை நெடுஞ்சாலை  கவுண்டம்பாளையம்-கண்ணப்ப நகர் சந்திப்பு பகுதியில் கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் சார்பில் தற்காலிக கூரையானது அமைக்கப்பட்டுள்ளது
 
பச்சை நிற துணியால் சுமார் 15 மீட்டர் நீளத்திற்கு சாலையின் ஒரு பகுதியில் இந்த கூரை அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து சிக்னலில் நிற்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
 
கடுமையான சுட்டெரிக்கும் வெயிலில் வாகனத்தை ஓட்டி வருபவர்கள் சிக்னலில் நிற்கும் பொழுது அதிக அளவிலான வெப்பத்தின் தாக்குதலுக்கு ஆளாகும் சூழலில் தற்போது மாநகராட்சி சார்பில் கோவையில் அமைக்கப்பட்டுள்ள முதல் நிழற்குடை இது என்னும் நிலையில் இதே போன்று அனைத்து சிக்னல்களிலும் அமைக்கும் பட்சத்தில் மிகவும் பயனுள்ளதாக அமையும் என  வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குலதெய்வ வழிபாட்டுக்கு எதிராக பேசினாரா ஆர்.என்.ரவி: காவல்துறையில் புகார் அளித்த ஆளுனர் மாளிகை..!

இன்று 8 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படம்.. ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியீடு..!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம்.. மேலும் 7 பேர் கைது.. இன்னும் கைது இருக்கும் என தகவல்..!

இப்படிப்பட்ட அமைச்சர் இருக்கும்வரை தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments