Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்கள்:மக்கள் போராட்டம்

Arun Prasath
திங்கள், 21 அக்டோபர் 2019 (11:36 IST)
ஈரோடு மாவட்டத்தில் ஒரு சமூகத்தினரின் குல தெய்வ கோவிலில் உள்ள சாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் தொப்பபாளையம் பகுதியில், காளியண்ணன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமான குல தெய்வமாகும்.

இந்நிலையில் நேற்று இரவு, அக்கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த இரண்டு சாமி சிலைகளையும் உடைத்துவிட்டு சென்றுள்ளனர். மேலும் அங்கிருந்த சேமிப்பு பெட்டியையும் உடைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த தகவலை அறிந்து 100 க்கும் மேற்பட்ட போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இரவோடு இரவாக மர்ம நபர்கள் சாமி சிலைகளை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments