Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளியில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த ஆசிரியர்: சோகத்தில் மாணவிகள்!

Advertiesment
teacher
, புதன், 9 நவம்பர் 2022 (16:02 IST)
பள்ளியில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த ஆசிரியர்: சோகத்தில் மாணவிகள்!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடீரென ஆசிரியர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமாபுரம் என்ற பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சரவணன் என்ற ஆசிரியர் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் அவர் பள்ளிக்கு வந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் இனிமையாக பழகும் சரவணன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தது சக ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மேயர் ப்ரியா