Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு தர்ம அடி

Advertiesment
4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு தர்ம அடி
, வியாழன், 14 ஜூலை 2016 (21:15 IST)
4ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 

 
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் தெய்வானை (9) (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டு உள்ளது). பவானி வெட்டுவாங்கேணியில் உள்ள செயின்ட் ஜோசப் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறார்.
 
இப்பள்ளியில் சாமி (21) என்பவர் ஆங்கில ஆசிரியராக உள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பவானி பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளார். ஜூன் 12 அன்று காலை பள்ளிக்கு செல்லாமல் பவானி அழுதுள்ளார். அப்போது பெற்றோர்கள் விசாரித்தபோது, ஆசிரியர் சாமி, தன்னை தனியாக அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதைக் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து பவானியின் பெற்றோர் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அதற்குள்ளாக அப்பகுதி இளைஞர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர் சாமியை சரமாரியாக தாக்கியுள்ளனர். 
 
மேலும், சாமி மீது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போஸ்கோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்க கம்பெனியை தொழிலாளர்கள் வசமே ஒப்படைக்கும் வெனிசுலா