தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வரும் நிலையில் டாஸ்மாக்கில் பீர் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பல பகுதிகளிலும் வெயில் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடும் வெயில் காரணமாக டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுவாகா நாள்தோறும் டாஸ்மாக்கில் தோராடமாக ரூ.90 கோடி வரை விற்பனை நடைபெறும் நிலையில் அதில் ரூ.25 கோடி வரை பீர் விற்பனையாகிறது. தற்போது வெயில் அதிகமாக உள்ளதால் பலரும் பீரை அதிக அளவில் வாங்குகிறார்களாம்.
ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் பீர் விற்பனை 30 சதவீதம் வரை அதிகரிக்கும். ஆனால் இந்த முறை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு இன்றி விற்பனையாகும் வகையில் அதிக அளவில் இருப்பு வைத்துக்கொள்ள ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.