Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ்மாக் சரக்குகளுக்குப் பாதுகாப்பு கொடுங்கள்... இல்லன்னா குடோனுக்கு மாற்றுங்கள் - அதிகாரிகளுக்கு உத்தரவு

டாஸ்மாக் சரக்குகளுக்குப் பாதுகாப்பு கொடுங்கள்... இல்லன்னா குடோனுக்கு மாற்றுங்கள் - அதிகாரிகளுக்கு உத்தரவு
, வெள்ளி, 27 மார்ச் 2020 (14:55 IST)
ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் சில இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்குள் புகுந்து திருடும் போக்கி அதிகரித்துள்ளது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் ஒரு பக்கமாக தமிழகத்தில் செயல்பட்டு வந்த சாராயக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்கள் முடிந்துள்ள நிலையில் குடிமகன்கள் குடிக்காமல் இருக்க முடியாமல் கடைகளுக்குள் புகுந்து திருடும் சம்பவங்களும் நடந்துள்ளன.

இது சம்மந்தமாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு மற்றும் முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுக்கடைகளின் பூட்டை உடைத்து மதுபானங்களை திருடிச்செல்லும் சம்பவங்களை தடுக்கும் வகையில், மதுபானங்களை உடனடியாக டாஸ்மாக் குடோன்களுக்கு மாற்றம் செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாவட்ட மேலாளர்களிடம் அறிவுறுத்துகின்றனர்.

இதன்படி, தொலைதூர பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் இருந்து கொள்ளை போகும் சம்பவங்களை தடுக்கும் வகையில் மதுபானங்கள் வெளியே கொண்டு செல்லப்பட வேண்டும். மதுக்கடைகளில் இருந்து மதுபானங்கள் குடோன்களுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

ஒருவேளை குடோன்களில் போதுமான அளவுக்கு மதுபானங்களை வைக்க இடவசதி இல்லை என்றால் மாவட்ட மேலாளர்களால் அடையாளம் காணப்படும், மதுக்கடைகளுக்கு எடுத்துச் செல்வதற்கு வசதியாக, தங்களுடைய தாலுகாக்களில் உள்ள பண்டகசாலைகள், குடோன்கள் மற்றும் திருமண மண்டபங்களில் தற்காலிகமாக வைக்க வேண்டும். இதற்கான வாடகை கட்டணம் குறைவாக இருப்பதையும், ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வரை வாடகைக்கு எடுக்க வேண்டும் என்பதையும் மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும். மதுக்கடைகளில் இருந்து குடோன்கள், திருமண மண்டபங்களில் மதுபானங்கள் இருப்பு வைத்தால் அங்கு தீ தடுப்பான்கள் பொருத்துவதோடு, கண்காணிப்பு கேமரா பொருத்தியும் கண்காணிக்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்கள், பாதுகாப்பு ஊழியர்களை சுழற்சி முறையில் நிர்ணயித்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். இந்த ஏற்பாடுகளை தவிர போலீஸ் பாதுகாப்பும் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் கமிஷனர்களிடம் இருந்து கேட்டு பெற வேண்டும்.

ருட்டு போவதற்கு வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் கடைகளில் இருந்து மதுபானங்கள் வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்போகும் செயல் திட்டத்தை மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் டாஸ்மாக் மேலாளர்கள் தெரிவிக்க வேண்டும். போதுமான அளவு போலீஸ் பாதுகாப்போடு மதுபானங்களை வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும். எந்தெந்த கடைகளில் இருந்து மதுபானங்கள் எந்த இடத்துக்கு மாற்றப்படுகிறது என்ற விவரத்தை மாவட்ட மேலாளர்கள் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும்” - இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறையில் இருக்கும் 11 ஆயிரம் கைதிகள் விடுவிப்பு !