Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.756 கோடி வங்கிக் கணக்கில் இருப்பு காட்டிய இளைஞருக்கு வந்த இன்னொரு குறுஞ்செய்தி..!

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2023 (12:00 IST)
தஞ்சாவூரைச் சேர்ந்த வங்கி வாடிக்கையாளர் ஒருவரின் வங்கி கணக்கில் ரூபாய் 756 கோடி இருப்பு இருப்பதாக எஸ்எம்எஸ் வந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதே  இளைஞருக்கு இன்னொரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

தஞ்சையை சேர்ந்த கணேசன் என்ற தனியார் வங்கி வாடிக்கையாளர் வங்கிக்கணக்கில் ரூ.756 கோடி இருப்பு இருப்பதாக சமீபத்தில் ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அந்த எஸ்எம்எஸ் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தேன் என்று கூறியிருந்தார்

 ஆனால் இது குறித்து வங்கி அதிகாரிகள் விசாரணை செய்த போது அவரது வங்கி கணக்கில் அவரது இருப்பு சரியாகவே இருந்தது என்றும் ஆனால் குறுஞ்செய்தி மட்டுமே தவறாக அனுப்பப்பட்டிருப்பது என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் தற்போது கணேசன் என்ற இளைஞருக்கு வங்கி மீண்டும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளது. அதில் உங்கள் வங்கி கணக்கில் உள்ள இருப்பு  தவறாக இருப்பது குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் இனிமேல் இவ்விதமான தவறு நடைபெறாது என்றும் நாங்கள் சிறந்த சேவையை உங்களுக்கு செய்ய தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த குறுஞ்செய்தியை அவர் செய்தியாளர்களிடம் காண்பிக்க அந்த குறுஞ்செய்தியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  கடந்த சில நாட்களாக வங்கி இருப்பு குறித்த தவறான எஸ்எம்எஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments