Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்; 1.65 லட்சம் பேர் பயணம்! – புத்தாண்டு ரிப்போர்ட்!

3 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்; 1.65 லட்சம் பேர் பயணம்! – புத்தாண்டு ரிப்போர்ட்!
, வியாழன், 14 ஏப்ரல் 2022 (18:04 IST)
தமிழ் புத்தாண்டு விடுமுறைக்காக 1.65 லட்சம் பேர் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. நாளை புனித வெள்ளி தொடர்ந்து சனி, ஞாயிறு என 4 நாட்கள் விடுமுறை இருப்பதால் பலரும் சென்னையிலிருந்து சொந்த ஊர் புறப்பட்டனர்.

அவர்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக போக்குவரத்துத் துறை 3 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்கியது. இந்த சிறப்பு பேருந்துகளில் 1.65 லட்சம் பேர் பயணித்துள்ளதாக கூறியுள்ள போக்குவரத்துத் துறை திரும்ப வருவதற்கு 17ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர், அமைச்சர்கள் இல்லாத கவர்னரின் தேநீர் விருந்து: யார் யார் கலந்து கொண்டார்கள்?