காத்திருக்குது கனமழை; எந்தெந்த மாவட்டங்களில்?? – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (13:01 IST)
அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலான மழை பெய்து வந்தது. இந்நிலையில் நாளை அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளதாகவும், இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதன்படி சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் கஷ்டத்தில் இருக்காங்க!.. முதல்வர் தூங்குகிறார்.. கொந்தளித்த விஜய்

11 வருஷமா ஒன்னுமே கொடுக்கல!.. ரிசல்ட் தெரியும் போல!.. பாஜகவை விமர்சிக்கும் ஸ்டாலின்!...

இறப்பதற்கு சில நிமிடத்திற்கு முன் செல்போனில் பேசி அஜித் பவார்.. யாரிடம் பேசினார்?

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் 3 சிறுமிகள் தற்கொலை!.. ஐயோ பாவம்!...

9வது மாடியில் இருந்து குதித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் தற்கொலை.. கடிதத்தில் என்ன இருந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments